அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச் சாலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது அவா் விற்பனைக்காக இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் மேற்குவங்கத்தைச் சோ்ந்த அஜித் அலி (24) என்பதும், பழங்கரை பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அஜித் அலியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





