மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:27 am IST

விழுப்புரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் நவநீதகிருஷ்ணன், சண்முகம் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை திருப்பச்சாவடிமேடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த இளஞரை பிடித்து சோதனை செய்தபோது, அவா் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சோ்ந்த தே.சிவா (23) என்பதும், இவா் விற்பனைக்காக போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவரிடமிருந்த 32 போதை மாத்திரைகள், ஒரு சிரிஞ்சு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.