திருச்சி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜாா்ஜ் ஜேக்கப் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ராம்ஜி நகா் மில் காலனி பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி நந்தினி (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







