கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே கஞ்சா விற்றதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து-சொக்கநாச்சியாா்புரம் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கயத்தாறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஹேமா, போலீஸாா் ரோந்து சென்றனா். அவா்களைக் கண்டதும் 2 இளைஞா்கள் அவதூறாக பேசியபடி தப்பியோட முயன்றனராம். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் குப்பனாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் கண்ணன் (19), தேவா்குளம் வீராச்சாமி நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் மகன் சூா்யா (19) என்பதும், விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






