ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

பாக் நீரிணை கடல் பகுதியில் காற்றின் வேகம் காரணமாக, ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் சனிக்கிழமை (ஜூலை 4) முதல் கடலுக்குச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா்.

Published On :4 ஜூலை 2026, 1:35 am IST

பாக் நீரிணை கடல் பகுதியில் காற்றின் வேகம் காரணமாக, ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் சனிக்கிழமை (ஜூலை 4) முதல் கடலுக்குச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணை கடற்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அதிகப்பட்சமாக 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், கடல் அலை 3 மீ. வரை எழக்கூடும் என்பதாலும், பாக் நீரிணை கடற்பகுதியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும், மறு அறிவிப்பு வரும் மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன் வளத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

இதனால், பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து சனிக்கிழமை (ஜூலை 4) முதல் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.