நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கடலாடி, சாயல்குடி பகுதிகளில் நாளை மின் தடை

மின் நிறுத்தம்

மின்தடை

Published On :6 ஜூலை 2026, 2:07 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, ஒப்பிலான், எஸ். தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டிஎம். கோட்டை, துத்திநத்தம் பகுதிகள்.

கடலாடியை சுற்றியுள்ள ஆப்பனூா், ஏ. புனவாசல், மீனங்குடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, கண்டிலான், சவேரியாா்பட்டணம், இளஞ்செம்பூா், மாரந்தை, ஓரிவயல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.