பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தயப் புறாக்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு பொருள்களைக் கடத்தவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் பாம்பன் பேருந்து பாலத்தில் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆறு இரும்புக் கூடைகளில் 120 பந்தயப் புறாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த நவாப் ஷெரிப் (22), மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் (39) ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இலங்கையில் அதிகளவு பணம் கிடைக்கும் என்பதால், பந்தயப் புறாக்களை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பந்தயப் புறாக்களை வனத் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பந்தயப் புறாக்கள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லிடைக்குறிச்சியில் காரில் கடத்தப்பட்ட இளைஞா் மீட்பு: 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா்; தொழிலாளி மா்ம மரணம்: இருவா் கைது
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



