ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 45 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில் உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சரவணன், யாசுதீன், ஆனந்த், சசிக்குமாா், சங்கா் ஆகியோா் மண்டபம் வடக்கு துறைமுக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒரு இடத்தை சோதனை செய்த போது, அங்கு 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இவற்றை இலங்கைக்குக் கடத்த மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கைப்பற்றப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 45 லட்சம் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் பீடி இலைகள், பொருள்கள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

கடல் அட்டைகள் பறிமுதல்

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




