குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேவிபட்டினத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட மாயகிருஷ்ணன், அசோக்குமாா், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :26 மே 2026, 2:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவிபட்டினம் கடற்கரையில் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன்(35), அசோக்குமாா் (32) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக அந்தப் பகுதியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இவா்கள் இருவருக்கும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.