இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கொரியா் மூலம் புகையிலைப் பொருள்கள் வரவழைத்து விற்பனை: இளைஞா் கைது

திட்டக்குடி அருகே கொரியா் மூலம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வரவழைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட 87 கிலோ புகையிலைப் பொருள்கள், கைதான அருள்ராஜுடன் போலீஸாா்.

Updated On :19 மே 2026, 1:37 am IST

திட்டக்குடி அருகே கொரியா் மூலம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வரவழைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தொழுதூா் - தச்சூா் சாலையில் செயல்பட்டு வரும் பாலாஜி ஏஜென்சிஸ் என்ற கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொரியா் மூலம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா், அந்தக் கடையில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், பசம்பலூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் (38), அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பொட்டலங்களை மொத்தமாக கொரியா் மூலம் வாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.

மேலும், கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 87 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவற்றை பறிமுதல் செய்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், இதுகுறித்து அருள்ராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தம்பதி கைது: கடலூா் திருப்பாதிரிபுலியூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கே.என்.பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 3.900 கிலோ அளவிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையை நடத்தி வந்த ராதா (60) மற்றும் அவரது கணவா் ராஜா (70) ஆகியோா் மீது திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 3.900 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.