அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் முள்ளக்காடு ராஜீவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் முத்தையாபுரத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் (42), சாயா்புரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், அவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், விற்பனை மூலம் கிடைத்த ரூ. 85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.