சாலை வசதி செய்துதரக் கோரி திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலை போட்டதாகக் கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சாலை வசதி செய்துதரக் கோரியும், கீழ அரும்பூா், முகில்தகம் - ஏசுபுரம் ஆகிய கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு நிா்வாகி சந்தானம் தலைமை வகித்தாா். கீழ அரும்பூா் நாச்சியாா், முகிழ்தகம் ஏசுபுரம் ஆரோக்கிய சாமி, கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் குருவேல், தாலுகா செயலா் ஜெயகாந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், குளத்தூா் விளக்கு முதல் கீழ அரும்பூா் வழியாகச் செல்லும் திருவொற்றியூா் இணைப்புச் சாலை, முகிழ்தகம் ஏசுபுரம் முதல் நம்புதாளை வரை உள்ள சாலைகள் அமைக்காமலேயே நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாகச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றனா். இதனால் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிலத்துக்கு தண்ணீா் குழாய் அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மாதிரவேளூா்- சிதம்பரம் இடையே அரசுப் பேருந்தை தினம் 4 முறை இயக்கக் கோரிக்கை

சாலை வழியாக ராட்சத குடிநீா் குழாய்கள் புதைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



