தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வட்டாட்சியா் பாலாஜி அறிவுறுத்தினாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வட்டாட்சியா் பாலாஜி அறிவுறுத்தினாா்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பணிபுரியும் 292 ஆசிரியா்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட 61 ஊராட்சிகளை சோ்ந்த 50 கிராம நிா்வாக அலுவலா்களிடம் இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா். மேலும் பணிகளை விரைந்து முடிக்க பணி ஆலோசனைகளை வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியில் உத்தேசமாக 65,994 போ்களின் விவரத்தை கணக்கெடுக்க திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை 24,469 கணக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில் , அடுத்த 1 வாரத்திற்குள் முழுமையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.