சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!
சத்தியபாமா குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சை முதல்வர் விஜய் விமர்சித்தது குறித்து...

வாக்கு சேகரிப்பின்போது... - படம் - விடியோ கிளிப்
தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சை முதல்வர் விஜய் இன்று (அக். 4) விமர்சித்துள்ளார்.
தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
வாக்கு சேகரிப்பின்போது முதல்வர் விஜய் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்கின்ற ஆள் நான் அல்ல. என் சொந்தங்களை எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பேன். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்.
திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் வாக்களிப்பது பெண்களை அநாகரிகமாகப் பேசுவதை நாம் ஆதரிப்பது போல ஆகிவிடும். இதை நான் வெறும் ஓட்டுக்காக சொல்லவில்லை.
மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக். 2) இங்கு பிரசாரத்துக்கு வந்த போது, சத்தியபாமா சகோதரியை என்ன பேசிவிட்டு சென்றார்? அதை காது கொடுத்து கேட்க முடியாது. மறக்கும்படியா பேசியிருக்கிறார்? அவர் மட்டுமா இப்படி பேசுகிறார்? அவர் வளர்த்து வைத்திருக்கும் அனைவரும் இப்படித்தான் பேசி வருகிறார்கள்.
என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதை நான் தாங்கிக் கொள்கிறேன், பொறுத்துக்கொள்வேன். ஆனால், நமது சகோதரி பற்றியோ வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கை பற்றியோ நீங்கள் பேசினால் அதை நான் சும்மா விடமாட்டேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
Summary
Chief Minister Vijay today (Oct. 4) criticized the remarks made by DMK leader M.K. Stalin regarding Sathyabama, the TVK candidate for the Dharapuram constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





