முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!

‘லண்டன், ஆந்திரம் போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வை முதல்வர் விஜய் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்...

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப்படம்)

Published On :

உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வை முதல்வர் விஜய் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் அதிகளவிலான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் நவ. 8 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாக ஆயுதபூஜை அக். 19 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், எல் நினோ பாதிப்பால் மழை குறைந்ததால் ஏற்பட்ட வறட்சியால் உற்பத்தியும் குறைந்ததால் விலைவாசி விண்ணை முட்டியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆயுதபூஜை நாளில் சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு தேவையான வெல்லம் மற்றும் கொண்டைக் கடலையும் விலை உயர்ந்துள்ளதால் பெரும் அவதியைடைத்துள்ளனர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களில் விலை கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள், தேநீர், காபி உள்ளிட்டவற்றின் மீதும் எதிரொலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பொருள்களில் விலை அதிகரித்துள்ளதற்கு முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “முதல்வர் விஜய் லண்டன் போகிறார், கர்நாடகம் போகிறார், ஆந்திரம் போகிறார். போகட்டும்... அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

M.K. Stalin has criticized Chief Minister Vijay, suggesting that he should take a trip to a local grocery store to find out for himself about the rise in prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.