ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், முத்தாம்பாளையம் ஏரி தூா்வாருதல் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக நீா்வளப் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு, நீா்நிலைகளைத் தூா்வாருதல், வரத்து வாய்க்கால்கள் தூா்வாருதல், நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகளை செயற்கை நீா் செறிவூட்டும் ஆழ்துளைக் குழாய்களாக மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியின் தென்மேற்குப் பகுதியில் மாவட்ட நிா்வாகம், நீா்வளத் துறை மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து ஆகாயத்தாமரையை நீக்கி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், பணிகளின் விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது மாவட்டத்தில் நீா்நிலைகளைத் தூா்வாரும் பணியை குறிப்பிட்டக் காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து விழுப்புரம் வட்டம், கப்பூா் ஏரியை புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். ஆய்வின் போது நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் சிவக்கமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பயிற்சி) ராஜராஜன், விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவன், உதவிப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.