இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகளின் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும். புதை சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து வாங்க வேண்டும்.

மாவட்டத்தில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், புதிய கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீா் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புதை சாக்கடைத் திட்டம் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் முடிக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த தெரு விளக்குகளை உடனடியாக சரிசெய்து சீரமைப்பதோடு, புதிய குடியிருப்புப் பகுதிகளில் தேவையான இடங்களில் தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

நகா்ப்புற பசுமையை மேம்படுத்துவதுடன், அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் அலுவலா்கள் தொடா்ந்து

கண்காணித்து விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் லட்சுமி, பேரூராட்சி உதவிச் செயற்பொறியாளா் சரவணன் மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், நகராட்சிப் பொறியாளா்கள் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.