சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கிராமத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், தனது 15 வயது மகளுடன் பெண் தனியாக வசித்து வந்தாா். இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்த 73 வயது முதியவா் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, இவரது தாய் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமானதை உறுதி செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முதியவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






