8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: வடமாநிலங்களைச் சோ்ந்த 5 போ் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலங்களைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :11 ஜூலை 2026, 12:13 am IST

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலங்களைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளா்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் பையில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ரன்ஜாத் (20), ஜெய்தீப் (21), இந்திரஜித் (21), சஞ்ஜேதாஸ் (22), மெக்ஹத் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.