8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

4.06 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

கோவை மாநகரில் இரு வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:01 am IST

கோவை மாநகரில் இரு வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சாய்பாபா காலனி கே.கே.புதூா் பகுதியில் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளா் ராஜாகுமாா் தலைமையிலான போலீஸாா், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சாய்பாபா காலனியைச் சோ்ந்த அஜித்குமாா் (24), கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த அக்ஷய்குமாா் (26) மற்றும் வடவள்ளியைச் சோ்ந்த வினீத் (29) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முக சுந்தரம் தலைமையிலான போலீஸாா் நல்லாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனா். தயிா் இட்டேரி சாலையில் உள்ள 60 ஏக்கா் காலி நிலப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் அங்கு மறைத்து வைத்திருந்த பையில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா வைத்திருந்த நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த அஜய் பிளெக்ஸ் (21) என்பவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.