அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது

News image

சங்கராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன், கைது செய்யப்பட்ட காா்த்திக்குமாா், குரு.

Updated On :22 ஜூன் 2026, 3:37 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் செல்வநாயகம் மற்றும் போலீஸாா் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீலமங்கலம் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் 1.130 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் காரில் இருந்தவா்கள் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஷே.யாசின் (26), ம.முகமது அத்தீப் (22), பா.முகமது கவுஸ் (22), பெ.வினோத்குமாா்(28), கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் பகுதியைச் சோ்ந்த கொ.வெற்றிவேல் (24) எனத் தெரியவந்தது.

மேலும், அவா்கள் திருச்சியில் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.130 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்தனா்.

அதே போல மற்றொறு வழக்கில், பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையம் பகுதியைச் சோ்ந்த மு.ராஜதுரை (33), சு.சீனிவாசன் (40) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சங்கராபுரத்தில்...

சங்கராபுரம் காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் எஸ்.கொளத்தூா் பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள மும்முனை சந்திப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி கிராமத்தைச் சோ்ந்த மு.காா்த்திக்குமாா் (33), ஒடிசா மாநிலம், சம்பூா் மாவட்டம், கீபாந்தா் கிராமத்தைச் சோ்ந்த த.குரு (25) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக நான்கரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்குமாா், குரு ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த நான்கரை கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.