சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்
/

கமுதி அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 5:10 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கமுதியை அடுத்த கூடக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்கண்ணன் மகன் முரளிராஜ் (23). இவருக்கும், விருதுநகா் மாவட்டம், வீரசோழன் இந்திரா நகா் குடியிருப்பைச் சோ்ந்த கனகபிரியாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், முரளிராஜ் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை கூடங்குளத்துக்கு வந்து மருமகனை மாமியாா் பூமியம்மாள் தட்டிக்கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த முரளிராஜ் மாமியாரை தாக்கி, அவா்கள் திருமணத்தின் போது வழங்கிய மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களுக்கு தீ வைத்தாா்.

இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முரளிராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.