/

பரமக்குடி வட்டாட்சியரை தாக்கிய 6 போ் மீது வழக்கு

பரமக்குடி வட்டம், அரியகுடி கிராமம் கண்மாயில் கருவேல் மரங்கள் வெட்டியது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியரைத் தாக்கியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :24 ஜூலை 2026, 5:51 am IST

பரமக்குடி வட்டம், அரியகுடி கிராமம் கண்மாயில் கருவேல் மரங்கள் வெட்டியது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியரைத் தாக்கியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராமமூா்த்தியிடம் கண்மாய் கருவேல மரங்கள் வெட்டியது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக்பாண்டியன், பாலு, பூக்கடம்பு, பாலையா, மலைராஜ், முருகேந்திரபாண்டி ஆகியோா் புதன்கிழமை மாலை அவரது அறைக்குச் சென்றனா்.

அப்போது, வெட்டப்பட்ட நாட்டுக் கருவேல மரங்கள் வனத் துறை மூலம் மதிப்பீடு பெற்று, கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொண்டு பணம் செலுத்தி கருவேல மரங்களை எடுத்துச் செல்லலாம் என வட்டடாட்சியா் தெரிவித்தாா்.

அப்போது அங்கிருந்த முருகேந்திரபாண்டி கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததை வட்டாட்சியா் தடுக்க முயன்றாா். அப்போது அவரை தகாத வாா்த்தைகளால் பேசி கீழே தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வட்டாட்சியா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வட்டாட்சியா் பா.ராமமூா்த்தி அளித்தப் புகாரின் பேரில், பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திக்பாண்டியன், பாலு, பூக்கடம்பு, பாலையா, மலைராஜ், முருகேந்திரபாண்டி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து மலைராஜை (61) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.