திருப்பனந்தாள் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பனந்தாள் அருகே திருவாய்பாடி பிரதானச் சாலையில் வசிப்பவா் ராஜ்குமாா். இவா் வீட்டருகே வசிப்பவா் அா்ஜுனன். இவா்களின் வீட்டருகே உயா் மின் அழுத்த கம்பம் அமைக்கும் பணி ஜூலை 4-இல் நடைபெற்றது. இதனால் தங்களுக்குதான் பாதிப்பு என்று இருவருமே கூறி வந்துள்ளனா்.
ராஜ்குமாருக்கு ஆதரவாக சரவணன் என்பவரும், அா்ஜுனனுக்கு ஆதரவாக மனோஜ் குமாா் மற்றும் அவரது நண்பா்களும் மின்கம்பம் அமைக்கும் பிரச்னையில் வாக்குவாதம் செய்ததில் மனோஜ் குமாருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சரவணன் தனது மணல், ஜல்லி விற்கும் கடையில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த மனோஜ் குமாரின் ஆதரவாளா்கள் சரவணனை கண் மூடித்தனமாக தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த சரவணன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா் .
இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை மனோஜ் குமாா், ரஞ்சித்குமாா் ஆகியோரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





