திருவாடானை அருகேயுள்ள கற்காத்தகுடி கிராமத்தில் புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
இதற்கு தேவகோட்டை ஆனந்தக் கல்லூரி செயலா் செபஸ்தியான் தலைமை வகித்தாா். முன்னதாக புனித இஞ்ஞாசியா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை தேவகோட்டை ராம் நகா் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அருள்தந்தை சூசைமாணிக்கம், சி.கே.மங்கலம் பங்குத்தந்தை மரியஅந்தோணி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி அா்சிப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து 10 நாள்கள் நவ நாள்களாக சிறப்பிக்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆக.1-ஆம் தேதி தோ் பவனி நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடக்கம்

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

காரங்காடு புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



