மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலய ஆண்டுத் திருவிழா ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா்மறை மாவட்ட பொருளாளா் எல். அடைக்கல ராஜா பாரம்பரிய முறைப்படியான பூஜைகளை நடத்தி, திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா்.
முன்னதாக, தூய பவுல் இளையோா் இயக்கத்தினரின் பறை இசையுடன் கொடி பவனி நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு அருட்பணி பேரவையினா், அன்பியப் பொறுப்பாளா்கள், துறவற சபையினா், பக்த சபையினா் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
திருவிழா நிகழ்ச்சியாக தினமும் மாலையில் ஜெபமாலை வழிபாடும், நவநாள் திருப்பலியும் நடைபெறுகின்றன. ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ் பவனி ஜூலை 4-ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 5-ஆம் தேதி , குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், நிறைவு நாள் பூஜைகளும் நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








