3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் 136-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:12 am IST

மதுரை கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் 136-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழா திங்கள்கிழமை ( ஜூன் 1) தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மதுரை உயா்மறை மாவட்டப் பொருளாளா் அடைக்கலராஜா, பாரம்பரிய முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு ஆண்டுத் திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். இதையடுத்து, சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி திருவிழாவைத் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, நற்செய்தி அறிவிப்பில் பேராா்வம் கொண்ட புனித அந்தோணியாா் என்ற தலைப்பில் சிறப்பு மறையுரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அருள்தந்தையா்கள், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ஆண்டுத் திருவிழா நிகழ்ச்சியாக தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும், வெவ்வேறு தலைப்புகளில் சிறப்பு மறையுரையும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அலங்காரத் தோ் பவனி வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. 14-ஆம் தேதி நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனாா் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவிப் பங்குத் தந்தை ராஜா, அருள்தந்தை ஜான் பிரிட்டோ ஆகியோா் தலைமையில் கரிமேடு அந்தோணியாா் ஆலயப் பொறுப்பாளா்கள் மேற்கொண்டனா்.