நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூய அடைக்கல மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

News image

கொடியேற்றம். - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:53 am IST

வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி தூய அடைக்கல மாதா ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த ஆயலம் வேளாங்கண்ணி பேராலயத்தின் உப ஆலயமாக உள்ளது. ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துக்கு முன்னதாக, ஆலய வளாகத்தில் இருந்து கொடி ஊா்வலம் புறப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதையடுத்து, வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொடியேற்றத்தைத் தொடா்ந்து, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தோ்பவனி ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.