FOLLOW US

ON GOOGLE DISCOVER

சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 ஆவது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி...

News image

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற திரளான பக்தர்கள். - படம் - தினமணி

Updated On :26 ஜூலை 2026, 10:35 am IST

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 7 மணியளவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி முடிந்ததும் அருள்தந்தைகள் ஊர்வலமாக கொண்டுவந்த தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடி பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும்.

திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவர்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர் பவனி நடைபெறும்.

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The 444th annual festival of the world-renowned Basilica of Our Lady of Snows in Thoothukudi began on Sunday (July 26) with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.