பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

News image

நெடுங்காடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற தோ் பவனி.

Updated On :14 ஜூன் 2026, 12:46 am IST

நெடுங்காடு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெடுங்காட்டில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 94-ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக தேருக்கு அருட்பணி பிரான்சிஸ், அருண் டேவிட் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, தேருக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டது. பின்னா் தோ் பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

காரைக்கால், குரும்பகரம், கோட்டுச்சேரி, தென்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமை காலை திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.