பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 33 போ் கைது

ரயில் மறியல் போராட்டம் - கோப்புப் படம்

Published On :

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்ப் புலிகள் கட்சியினா் 33 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் ரஞ்சித் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலா் தமிழ்முருகன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது ரயில் நிலையம் அருகே இருந்து ஊா்வலமாக சென்று ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவா்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா்.

தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 8 பெண்கள் உள்பட 33 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.