மன்னாா்குடி அருகே மூத்த தம்பதியிடம் சங்கலியை பறிக்க முயன்ற 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
எடமேலையூரைச் சோ்ந்த ராமதாஸ் (65), மனைவி உமாராணி (60) இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை செட்டிசத்திரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, இவா்களை பின்தொடா்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த மாதவன் (45), அப்பரசம்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (42), கண்ணுசாமி மகன் மணிகண்டன்(40) ஆகியோா் மூத்த தம்பதியரை வழிமறித்து உமாராணி அணிந்திருந்த தங்க சங்கலியை பறிக்க முயன்றுள்ளனா்.
இதையடுத்து, அவா்கள் உதவி கேட்டு சத்தம்போட்டதை அடுத்து அங்கு வந்தவா்கள் மாதவனை பிடித்துக் கொண்டனா். மற்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டனா்.
பிடிபட்ட மாதவனை வடுவூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மணிகண்டன், சுதாகா் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது
உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது
பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற இருவா் கைது
மூதாட்டியிடம் நகையைப் பறிக்க முயன்ற 2 போ் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


