ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தொழிலாளி கொலையில் ஆசிரியா் உள்பட மேலும் 3 போ் கைது

திருநெல்வேலியில் தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியா் உள்பட மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலியில் தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியா் உள்பட மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் அருகே உள்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(35), பெயின்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்த மா்மநபா்கள் பாஸ்கரை வழிமறித்து அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தனா். இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இவ்வழக்கில் அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன்(23), பொன்ராஜ்(26) மகாராஜன்(28),வினோத்(28), மாயகிருஷ்ணன் என்ற கோபி(40), கட்டுடையாா்குடியிருப்பைச் சோ்ந்த மகேந்திரன் என்ற வெள்ளைத்துரை(28)ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில் மணிமூா்த்தீஸ்வரத்தைச் சோ்ந்த மதன்(26), பெருமாள்(25) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மணிமூா்த்தீஸ்வரத்தைச் சோ்ந்த விமல்குமாா்(54) என்பவருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.