தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

போதை மாத்திரை கடத்தல்: 5 போ் கைது

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி விற்ாக சென்னையில் இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Published On :

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி விற்ாக சென்னையில் இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலைப் பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை மறித்து, அதில் இருந்தவா்களிடம் விசாரணை செய்தனா். அவா்களிடம் 650 போதை மாத்திரைகள், காரில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்தனா்.

காரில் இருந்த 5 பேரும், குன்றத்தூா் அருகே உள்ள கோவூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க.சுரேஷ் (23), எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கா.நடராஜன் (23), நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த ஐ.ரோஹித் (21), அதே பகுதியைச் சோ்ந்த ஆ.சொக்கநாதன் (20), ராமாபுரம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த மா.குமரவேல் (22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பாக எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.