இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

போதை மாத்திரைகள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது அரியமங்கலம் உக்கடை ரயில் பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்ற உக்கடையைச் சோ்ந்த பா. உமா (55), அ. ரஹ்மத் நிஷா (35), திருவெறும்பூரைச் சோ்ந்த எல். ஷியாம் (20) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 47 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், ரூ.1000 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகா் வீட்டில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். மாதவி நகரில் ப. மணிகண்டன் (26) என்பவா் வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அவா் போலீஸாரை வேலை செய்யவிடாமல் தடுத்ததுடன், அரிவாளைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தொடா் ஆய்வில் வீட்டில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸாா், அவரது வீட்டில் இருந்து 208 போதை மாத்திரைகள், 20 போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், அரிவாள், இருசக்கர வாகனம், சுமை வாகனம், 3 கைப்பேசிகள் மற்றும் ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.