இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:31 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, இபி சாலை கமலா நேரு நகரில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜமீா் பாட்ஷா (22), சிந்தாமணி காந்தி நகரைச் சோ்ந்த ஆ. சந்தோஷ்குமாா் (23) ஆகியோா் என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், கைப்பேசி, ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.