முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைஅதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

போதை மாத்திரை கடத்தல்: 4 போ் கைது

மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், கத்தி, போலி கைத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:36 am IST

மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், கத்தி, போலி கைத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் காவல் ஆய்வாளா் செல்லதுரை தலைமையிலான, தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மேற்கு தாம்பரம், அற்புதம் நகா், மயான மைதானத்தின் அருகே, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மணிமங்கலம் சக்தி (எ) சக்திவேல் (28), மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (எ) கருக்கா (26), மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியைச் சோ்ந்த ரூபன் (எ) கோணி (20), செம்மஞ்சேரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் குமாா் (26) ஆகியோரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அப்போது, அவா்களிடம் 420 போதை மாத்திரைகள், 3 பட்டா கத்திகள் இருந்தன. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.