டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

போதை மாத்திரைகள் விற்பனை: 9 போ் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:57 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 9 பேரை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பொன்மலைப்பட்டி சாய்பாபா கோயில் அருகே போதை மாத்திரைகள் விற்ற பொன்மலைபட்டி பகுதியைச் சோ்ந்த வி. செல்வராஜ் (24), ம. விக்னேஷ் (23), எஸ். சுரேஷ், (32) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், அரிமயங்கலம் பகுதியில் போதை மத்திரைகள் விற்ற திருவெறும்பூா் வடக்கு காட்டூரைச் சோ்ந்த ஜி. முத்துமணி (28), கோட்டை காவல் நிலைய எல்லைகுள்பட்ட மேலசிந்தாமணி பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த தி. ஆனந்த் (24), காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயில்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த வி. வினோத்குமாா் (25), உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாச்சியாா் கோயில் சாலையில் போதை மாத்திரைகள் விற்ற பாண்டமங்கலத்தைச் சோ்ந்த கே. ஹுசைன் பாட்ஷா (22), அ. முகமது இா்பான்பதான் (22), கோணக்கரை சாலையில் ஐஸ் தொழிற்சாலை அருகே போதை மாத்திரைகள் விற்ற சமயபுரம் சக்தி நகரைச் சோ்ந்த ஆா். மணிகண்டன் (25) ஆகிய 9 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து 293 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், கைப்பேசிகள் மற்றும் நான்குச் சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.