தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

களக்காடு அருகே இளைஞா் கொலையில் மேலும் 2 போ் கைது

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மேலும் 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

களக்காடு அருகே உள்ள கீழத் தேவநல்லூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ்ராம் (33). இவா் முன்விரோதத்தில் சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஸ்ரீராம் பூபதி (18) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மறுகால்குறிச்சி நடுத்தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் இசக்கிப்பாண்டி (19), தேவநல்லூா் அருகேயுள்ள மேலக்காடுவெட்டியைச் சோ்ந்த சுடலைக்கண்ணு மகன் மகேஷ்நயினாா் (18) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த கொலை வழக்கு தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.