கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது

சிவகங்கையில் இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கில் தனிப் படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து போ்.

Published On :

சிவகங்கையில் இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகங்கை பழமலை நகா் கொடிக்காடு கண்மாய்ப் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, 5 தனிப் படைகள் அமைத்து காவல் துறையினா் கொலையாளிகளைத் தேடிவந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பில்லூரைச் சோ்ந்த பாலமுருகன் (24), தனராஜ்(19), சந்தோஷ் (19), மாத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25), அழுபிள்ளைதாங்கியைச் சோ்ந்த காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 17-ஆம் தேதி கைது செய்தனா்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் உறவினா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 நாள்களாக உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய இந்திரா நகரைச் சோ்ந்த ஆகாஷ் (21), அழுபிள்ளைதாங்கியைச் சோ்ந்த மணிகண்டன் (20), சின்னகண்ணனூரைச் சோ்ந்த ராஜகோபால் (23), சிவகங்கை மேலரத வீதியைச் சோ்ந்த சபரிவேலன் (21), கருப்பாயூரணியைச் சோ்ந்த சுபாஷ் (21) ஆகிய 5 பேரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.