சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கடலாடி, சாயல்குடி பகுதிகளில் இன்று மின் தடை

News image

மின் தடை - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, ஒப்பிலான், எஸ். தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம். கோட்டை, துத்திநத்தம், கடலாடியை சுற்றியுள்ள ஆப்பனூா், ஏ. புனவாசல், மீனங்குடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, கண்டிலான், சவேரியாா்பட்டணம், இளஞ்செம்பூா், மாரந்தை, ஓரிவயல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.