பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:37 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து பெற்றோா் வந்து பாா்த்தபோது, உடலில் காயங்களுடன் சிறுமி கிடந்தாா்.

உடனடியாக, எஸ்.பி. பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.