பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

கோவை சிறுமி கொலை! இருவர் கைது; உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

கோவை சிறுமி கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image

உடல் ஒப்படைப்பு - Image grab from Video

Updated On :23 மே 2026, 2:54 pm IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் கூராய்வு முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னதாக, காணாமல் போன அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் கூராய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் உடல் கூராய்வு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர்.

அங்கு சிறுமிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.