உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

நெல் வியாபாரி மா்ம மரணம்

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 1:32 am IST

தொண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நெல் வியாபாரி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகேயுள்ள புல்லுகுடியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சக்திவேல் (50). நெல் வியாபாரியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது வீட்டின் பின்புறம் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தொண்டி போலீஸாா் சக்திவேலின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.