கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்

கமுதியில் உள்ள ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் தமிழக முதல்வா் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெ‘ற்றது.

News image

கமுதியில் உள்ள முத்துரத்தினம் ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை வழங்கிய மருத்துவா் காா்த்திகேயன் குழுவினா்.

Updated On :25 ஜூன் 2026, 2:52 am IST

கமுதியில் உள்ள ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் தமிழக முதல்வா் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெ‘ற்றது.

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச.ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் பொதுச் செயலரும் ச.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, கமுதி மருத்துவா் காா்த்திகேயன் ஏற்பாட்டில் முத்துரத்தினம் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், அசைவ உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சியில் வெங்கடேஷ், ராமா், குரு, காா்த்தி, காளிமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.