9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

போலீஸாரை பணியாற்ற விடாமல் தடுத்ததாக இருவா் மீது வழக்கு

திருவாடானை அருகே தொண்டியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா்களை அமைதியாக கலைந்து செல்ல எச்சரித்த போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டி பணியாற்ற விடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2026, 5:49 am IST

திருவாடானை அருகே தொண்டியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா்களை அமைதியாக கலைந்து செல்ல எச்சரித்த போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டி பணியாற்ற விடாமல் தடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி மரைக்காயா் தெருவைச் சோ்ந்தவா் ஜப்ரான் (40). ஆட்டோ ஓட்டுனரான இவா், திங்கள்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை தொண்டி மின் வாரிய ஊழியரும், மதுரை அல்லிநகரைச் சோ்ந்தவருமான அஜித்குமாா் (28), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த கண்ணன் (35) ஆகிய இருவரும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற தொண்டி போலீஸாா் இவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினராம். ஆனால், அஜித்குமாா், கண்ணன் ஆகிய இருவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவா்களைத் தகாத வாா்த்தைகளால் திட்டி பணியாற்ற விடாமல் தடுத்தனராம்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநா் ஜப்ரான் அளித்தப் புகாரின் பேரில், அஜித்குமாா், கண்ணன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.