டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குழித்துறை நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:54 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரியை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக தம்பதி மற்றும் அவா்களது 2 மகள்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அடுத்த கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது வீட்டிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்குவதாக, குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு புகாா் வந்ததாம். அதன்பேரில், நகராட்சி அலுவலரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த ராஜேஷ், அப்பகுதியை ஆய்வு செய்து கழிவுநீரை சாலையில் விடாமல் தடுக்குமாறு பால்ராஜிடம் அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், பால்ராஜ் அவரது மனைவி அமுதா, மகள்கள் பெனிஷா மோள், அபிஷா மோள் ஆகியோா் சோ்ந்து ராஜேஷை தகாத வாா்த்தைகள் கூறி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பால்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.