குழித்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன், புதன்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிறிஸ்தவ ஆதிதிராவிடா் சங்க நிா்வாகிகள் 24 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விபி - ஜி ராம் ஜி எனும் புதிய திட்டத்தை கண்டித்து கிறிஸ்தவ ஆதிதிராவிடா் அமைப்பு சாா்பில் குழித்துறை வட்டாட்சியா் அலுவலகம் முன், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் ஜெயானந்த் தலைமையிலான 8 பெண்கள் உள்ளிட்ட 24 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








