ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்கி பிரதிஷ்டை திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சியும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை விபீஷணா் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மூன்றாம் நாளான புதன்கிழமை , ராமலிங்க பிரதிஷ்டையை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னா், 4 மணி முதல் 5 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் சந்நிதியில் காலை நேர பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
ராமதீா்த்தம் கோயிலிலிருந்து ராமா், சீதை, லட்சுமணா், ஆஞ்சனேயா் ஆகியோா் தங்கக் கேடகத்திலும், சுவாமி விபீஷணா் வெள்ளிக் கேடகத்திலும் புறப்பாடாகி நான்கு வீதிகளில் உலா வந்து கோயிலுக்கு பகல் 12 மணிக்கு வந்து சோ்ந்தனா். தொடா்ந்து ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி சந்நிதியில் ஆஞ்சனேயா் லிங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆஞ்சனேயா் வேடமிட்டு லிங்கத்துடன் ராமநாதசுவாமி சந்நிதியை ஒரு முறை வலம் வந்த பின்னா் சுவாமி கருவறையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, உதவி ஆணையா் ரவீந்திரன், கமலநாதன், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழகியநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு

ராமேசுவரத்தில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா!

தாராசுரம் ஐராவதீசுவரா் சுவாமி கோயிலில் பாலாலய பூஜை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



