மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளியில் புதிய கட்டடத்துக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி

சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.

News image
சாயல்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதியுதவி வழங்கிய கால்நடை வளா்ப்போா் பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்யம் சரவணன்.
Updated On :6 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு, கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சியின் நிறுவனா் வெள்ளிக்கிழமை நிதி உதவி வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த 75 ஆண்டுகளாக ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வரும், இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்பு பாதுகாப்பு கட்சியின் நிறுவனா் சத்தியம் சரவணன் இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.11 லட்சம் நிதியுதவி அளித்து, கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தாா். இதில் கடலாடி வட்டார யாதவா் சங்கத் தலைவா் சேதுஆறுமுகம், செயலா் ஆறுமுகம், பொருளாளா் நாகதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.